ETV Bharat / city

பாலியல் குற்றங்கள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - ஜனநாயக மாதர் சங்கம்

சென்னை: பாலியல் வன்முறைக் குற்றங்கள் குறித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் வற்புறுத்தியுள்ளது.

wing
wing
author img

By

Published : Dec 16, 2019, 7:16 PM IST

சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கிற்குப் பின்னர் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத் துணைத் தலைவர் வாசுகி, ”ஆண்டுதோறும் தேசிய அளவில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. தமிழ்நாட்டிலும் அதிகளவில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடக்கின்றன. எனவே, இது குறித்து விவாதிக்க அரசு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை என்கவுன்டர் செய்வது சரியான தீர்வாக அமையாது. பாலியல் வன்கொடுமை எனக் கூறி அரசியல் எதிரிகளையும் சமூக செயற்பாட்டாளர்களையும் அதிகாரவர்க்கம் என்கவுன்டர் செய்ய வாய்ப்புள்ளது. தவறு செய்தவர்களுக்கு காவல் துறை தண்டனை வழங்க முடியாது. நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் கொலையில் தொடர்புடையவர்கள் எனக்கூறி மூவரை காவல் துறையினர் என்கவுன்டர் செய்தனர். அதே நேரத்தில் அந்தக் மருத்துவரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தபோது, காவல் துறை என்ன செய்தது என்பதை நாடறியும்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருக்கு இன்றுதான் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அவரையும் காவல் துறை என்கவுன்டர் செய்யுமா? ஹைதராபாத் என்கவுன்டரையும் உன்னாவ் பாலியல் வழக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நீதி சமமாக இங்கு இருக்கிறதா என்ற உண்மை புரியும் “ எனத் தெரிவித்தார்.

உ. வாசுகி, ஜனநாயக மாதர் சங்கம்

இதையும் படிங்க: பாலியல் குற்ற வழக்குகளில் ஆந்திராவை பின்பற்றவேண்டும் - ராமதாஸ்

Intro:பாலியல் வன்முறை குற்றங்கள்
சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம்

ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

Body:சென்னை,
பாலியல் வன்முறை குற்றங்கள் குறித்து சட்டபேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை பல்கலைகழகத்தின் குற்றவியல் துறையும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் குறித்த கருத்தரங்கை நடத்தியது.

இந்தக் கருத்தரங்கிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் வாசுகி, தேசிய அளவில் ஆண்டுதோறும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை என்கவுண்டர் செய்வது சரியான தீர்வாக அமையாது. பாலியல் வன்கொடுமை என கூறி சமூகச் செயல்பாட்டாளர்களையும் என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளது. தவறு செய்தவர்களை காவல்துறை தண்டிக்க முடியாது.நீதி மன்றத்தின் மூலம் மட்டுமே தண்டிக்க வேண்டும்.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டார். அதில் தொடர்புடையவர்கள் என கூறி என்கவுண்டர் செய்தனர். ஆனால் அதே நேரத்தில் அந்த கால்நடை மருத்துவர் காவல்துறையில் புகார் அளித்தபோது பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்எல்ஏ வை பதவியில் இருந்து மட்டுமே நீக்கினர். அவருக்கு தற்போது தான் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தையும் உன்னவ் ம் பாலியல் வழக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை புரியும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.