இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு முழுவதும் வருமானவரித் துறையினர் அரசியல் ரீதியாக அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்துகின்றனர்.
தேர்தல் நேரத்தில் தேவையற்ற வருமானவரிச் சோதனைகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்தச் சோதனைகளால் அதிமுகவினர் பரப்புரைகளைத் தவிர்க்க வேண்டியுள்ளது. வருமானவரித் துறை அலுவலர்களின் நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது.
சோதனையின்போது, பணம் பறிமுதல்செய்யப்பட்டதாகத் தவறான தகவல்கள் ஊடகங்களுக்குக் கசிந்துவிடுகின்றன. ஆனால், அலுவலர்களின் முடிவுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதுதான்.
எனவே இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்துடன், அதிகாரத்தை மீறும் அலுவலர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ரெய்டுகளால் திமுகவிற்கு வாக்குகள் அதிகரிக்கும்’ - கனிமொழி