சென்னை: சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, ”துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டத்திருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. பாஜக, அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர்.
நரேந்திர மோடியே குஜராத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். 1995-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநர் இடையூறாக இருக்கிறார். மாநில அரசு இந்த நிலைப்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.
கல்விக் கொள்கையில் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டை இந்த அரசு முன்னெடுத்துள்ளது. அதிமுகவிற்கு தமிழர் நலன் தமிழ்நாடு நலனில் அக்கறை இல்லை. ஜெயலலிதாவின் கூற்றுக்கு எதிராக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்’ என காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவின் ஜய்ங் ஜக் அதிமுக: அமைச்சர் பொன்முடி கிண்டல்!