சென்னை: அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் லீலாவதி இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் லீலாவதியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தபோது, லீலாவதி தன்னுடைய சிறுநீரகத்தை எம்ஜிஆருக்கு அளித்ததையும் இரங்கலில் ஓபிஎஸ், இபிஎஸ் நினைவுகூர்ந்தனர்.