ETV Bharat / city

ஊழல் குற்றச்சாட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு வயது உயர்வா? - அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை : ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Jun 15, 2020, 8:29 PM IST

அண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழ்நாடு அரசு 58இல் இருந்து 59ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் ”நேர்மையாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஓராண்டு நீட்டிப்பதில் எந்தத் தவறும் இல்லை அதே வேளையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து, தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது என்றும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கான ஓய்வு பெறும் வயதை நீட்டித்தது செல்லாது என அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று (15-06-2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் உரிய அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.