இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று(ஆக.01) கண்டு களித்தார்.
திரைப்படத்தைப் பார்த்ததும், முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்திபனின் இந்த அசாத்தியமான முயற்சியை பாராட்டி, "எதிலும் தனி பாணி - அதுதான் பார்த்திபன், ஒத்த செருப்பு-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!, என்று பார்த்திபனையும் படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு, பார்த்திபன் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் 'நேற்றைய அரசியல் வரலாறு - 2092 "என்னும் முதலமைச்சரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதலமைச்சரிடம் வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.
இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4-ஆவது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதலமைச்சரின் பாராட்டு, தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக பார்த்திபன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்கியது சிம்புவின் ’பத்து தல’ ஷூட்டிங்