இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ” நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.
நீர் மூலம் பரவக்கூடிய நோய்களை தடுக்கும் வகையில், வீடுகளில் உள்ள தொட்டிகள், குழாயடிகள் போன்றவற்றில் பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.
தீபாவளிக்கு பின்னர் கோவிட், டைஃபாய்டு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் அதிகளவில் பரவாத வகையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை கொண்டு, தண்ணீரில் குளோரின் கலந்துள்ள அளவினை பரிசோதிக்கலாம். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கரோனா பரிசோதனை முகாம், மருத்துவ முகாம் போன்றவற்றை நடத்திட வேண்டும் “ என அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 92.66 லட்சம் பேருக்கு பாதிப்பு