சென்னை: அதிமுக தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமனிடம் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அடி உதை
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் ஆதரவாளர் என்று தவறாக நினைத்து வடசென்னை வடக்கு மாவட்டம் தொழிற்சங்க துணைச் செயலாளர் விஜயகுமார் மீது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விஜயகுமார் தெரிவித்ததாவது, வடசென்னை மாவட்ட செயலாளரான ராஜேஷ் முன்விரோதம் காரணமாக, பெங்களூர் புகழேந்திக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருப்பதாக கட்சியினர் மத்தியில் தவறான தகவலை பரப்பியதாகவும், இதனை நம்பிய பிற தொண்டர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார்.
மேலும், தன் மீது தாக்குதல் நடத்தியதற்கு தூண்டுகோலாக இருந்த வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது காவல் நிலையத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரியும், கட்சித் தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாக விஜயகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிமுக உள்கட்சி தேர்தல்: ஓபிஎஸ் - இபிஎஸ் வேட்புமனு தாக்கல்