ETV Bharat / city

அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை - அரசு இயற்கை மருத்துவக் கல்லூரி

தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர வரும் அக்.19 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 27, 2022, 10:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர நாளை முதல் வரும் அக்.19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு பி.என்.ஒய்.எஸ்.(B.N.Y.S) மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு 12 ஆம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடங்களிலோ வழங்கப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநரகம், சென்னை- 600 106 என்ற முகவரிக்கு அக்.19 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை செப்.28 ஆம் தேதி முதல் அக்.19 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால் (அ) கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் அக்.19 ஆம் தேதி மாலை 5.30 மணி வரை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தமாக தமிழக அரசு வழங்கும் மெய்நிகர் பயிற்சி வகுப்புகள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.