ETV Bharat / city

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு! விட்டுறாதீங்க.! - பதிவேற்றம் கட்டாயம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, சரியாக பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்களின் நிராகரிப்பைத் தவிர்க்க ஏதுவாக, வரும் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரைக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரியம்
author img

By

Published : Mar 11, 2022, 11:04 PM IST

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா மார்ச் 11ஆம் தேதியான இன்று பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், '2017-18 ஆண்டிற்கு அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே, விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. விண்ணப்பங்களுடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யத் தெரிவிக்கப்பட்டது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வுகள் 2021 டிச.8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் ஆன்லைனில் நடந்தது. பின், இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. ஏற்கெனவே, பணிநாடுனர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்துள்ள கல்விச் சான்றிதழ்களுடன் கூடுதலாக இளங்கலை, முதுகலை, எம்பில், பிஎச்டி, பணி அனுபவச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் ( நகல்கள்) செய்ய வேண்டும்.

பதிவேற்றம் கட்டாயம்

அரசு உதவிபெறும், சுயநிதி பல்தொழில்நுட்பக் கல்லூரியில், கற்பித்தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள் சார்ந்த தொழில்நுட்பக் கல்வி இயக்குநரிடம் ( Director of Technical Education ) மேலொப்பம் ( Counter Signature ) பெற்றிருத்தல் வேண்டும் . நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ( Deemed University ) கற்பித்தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள், சார்ந்த நிகர் நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் ( Registrar of Deemed University ) மேலொப்பம் ( Counter Signature ) பெற்றிருத்தல் வேண்டும்.

அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கற்பித்தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள் சார்ந்த கல்லூரிக் கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநரிடம் ( Regional Joint Director of Collegiate Education ) மேலொப்பம் (Counter Signature) பெற்றிருத்தல் வேண்டும். பணிநாடுநர்கள் சான்றிதழ்களை 11.3.2022-லிருந்து 18.3.2022-க்குள் http://www.trb.tn.nic.in/ என்ற TRB Website-ல் பதிவேற்றம் செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள, சான்றிதழ்களின் Original (அசல்) சான்றிதழ்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பின் போது ( Certificate verification ) கூர்ந்தாய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், பதிவேற்றம் செய்யப்படாத சான்றிதழ்கள் அல்லது புதிய சான்றிதழ்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது கூர்ந்தாய்விற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

மேலும், முழுமையான விவரங்கள் அளிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது தவறான தகவல்களை அளித்திருந்தாலோ அந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

திட்டவட்டம்

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பானக் கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 9444630068, 9444630028 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும், trbpolytechnicgrievance19@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எழுத்து மூலமாகத் தொடர்புகொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: '2047-ல் உலகையே இந்தியா வழிநடத்த வேண்டும்' - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.