சென்னை: பிடதி ஆசிரம தலைவர் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து நித்யானந்தா தியான பீட நிர்வாகி சென்னை காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்து, சித்தரிக்கப்பட்ட(மார்பிங்) வீடியோ காட்சியை காட்டி சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிடுகிறார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே நடிகை ரஞ்சிதா, இந்த வழக்கில் ஆர்த்திராவ், பரத்வாஜ் இடையேயான உரையாடல் மற்றும் சித்தரிக்கப்பட்ட(மார்பிங்) வீடியோ குறித்து மறு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று(பிப்.7) விசாரணைக்கு வந்தது. அப்போது ரஞ்சிதா தரப்பில், இந்த வழக்கை மறு விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதிகள், நேரடி விசாரணைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: நவராத்திரியில் நித்தியின் அவதாரங்கள்