சென்னை பனையூர் பகுதியில் உள்ள நடிகர் விஜய் இல்லத்தில் 30 மாவட்டச் செயலாலர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் ரீதியாக செய்த சில நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது விஜய் ஆலோசனை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
'அகில இந்திய தளபதி விஜய் இயக்கம்' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக வெளியான செய்தியால், கடந்த நவம்பர் 6ஆம் தேதி மாலை தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அதில் நடிகர் விஜயின் தந்தை அக்கட்சிக்கு பொதுச்செயலாளர் என்று பதிவு செய்யப்பட்டிருந்து.
இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் நடிகர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டார். அதில்,'எனக்கும், என் தந்தை தொடங்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரசிகர்கள் யாரும் அக்கட்சியில் இணைய வேண்டாம்' என்று தெரிவித்தார். மேலும் ’என் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் எச்சரித்தார். மேலும் விஜய் ரசிகர்களும் விஜயின் பெயரைக் கெடுக்கும் வகையில் எஸ்.ஏ.சி தொடர்ந்து பேசி வருவதாக சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டச் செயலாலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் எஸ்.ஏ.சி எடுத்து வரும் அரசியல் ரீதியான செயல்பாடுகள், நிர்வாகிகள் மத்தியில் தெளிவுபடுத்தும்விதமாக ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: ரஜினிகாந்தா? விஜயகாந்தா? அரசியலில் யாரை பின்பற்றுவார் விஜய்?