ETV Bharat / city

'சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை' - ஆன்மீக நிகழ்வில் ரஜினிகாந்த் பேச்சு - chennai

"நான் பணம், புகழ், மிகப்பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன். இருப்பினும், சந்தோஷம், நிம்மதி ஆகியவை 10 சதவீதம் கூட என்னிடம் இல்லை என சென்னையில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

”வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை”  நடிகர் ரஜினிகாந்த்

author img

By

Published : Jul 23, 2022, 9:23 AM IST

Updated : Jul 23, 2022, 9:37 AM IST

சென்னை: யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 'கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை ரஜினிகாந்த் நேற்று (ஜூலை 23) வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில், 'ஓம் குருவே சரணம்' என்று பேச்சை தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், "என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். என்னை பாராட்டுகிறார்களா, திட்டுகிறார்களா என எனக்கு தெரியவில்லை. நான் பல படங்களில் நடித்து உள்ளேன், ஆனால் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படம் ராகவேந்திரா, பாபாதான்.

பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமயமலைக்கு சென்றதாக சொன்னார்கள். என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் இன்னும் நான் நடிகராக இங்கே இருக்கிறேன். இமயமலையில் சில மூலிகைகள் கிடைக்கும் அதை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான ஆற்றல், வைட்டமின் கிடைக்கும்" என்று இமயமலை அனுபவத்தை ரஜினிகாந்த் பகிர்ந்தார்.

”வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை” நடிகர் ரஜினிகாந்த்

தொடர்ந்து பேசிய அவர்,"இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட, நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால், உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம். இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமல் நடமாடிக்கொண்டிருக்கும்போது போய் சேர்ந்து விட வேண்டும். நான் கூட இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தவன்தான்.

அறிவு, பணம், புகழ், பெயர் மிகப்பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை. ஏனென்றால், சந்தோஷம், நிம்மதி நிரந்தரம் கிடையாது" என்றார்.

இதையும் படிங்க: சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாணவி அசத்தல்

Last Updated : Jul 23, 2022, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.