ETV Bharat / city

அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளையின் ரூ.108 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு - இந்து சமய அறநிலைத்துறை - சாலுவான்குப்பம் கிராமத்தில் இறால் குஞ்சு பொறிப்பகம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம், அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 108 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்துள்ளது.

அறநிலைத்துறை
அறநிலைத்துறை
author img

By

Published : May 5, 2022, 7:44 AM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம், அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 11 நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அறக்கட்டளை வசம் அளித்து சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சுமார் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த 46 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, தற்போது முதற்கட்டமாக 22 ஆக்கிரமிப்பாளர்களை பட்டிபுலம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கிழக்கு புறத்தின் பண்ணை வீடுகள், பொழுதுபோக்கு விடுதிகள், தோட்டங்கள் ஆகியவைகளில் மதிற் சுவர் ஏற்படுத்தியும் அவற்றிற்கு அணுகு பாதை அமைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களில் ஒன்றான சாலுவான்குப்பம் கிராமத்தில் இறால் குஞ்சு பொறிப்பகம், உணவகம், பேக்கிரி, மதிற் சுவர்கள் மற்றும் அணுகு பாதை சாலை அமைத்தும் (17.90 ஏக்கர்) நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறக்கட்டளை வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு, சுமார் ரூ.108 கோடி ஆகும். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அரசு நிதி மூலம் சுமார் ரூ.10.50 கோடி மதிப்பில் மதிற் சுவர்கள் அமைக்க அரசாணை பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வின்போது, அறக்கட்டளை செயல் அலுவலர் சிறப்பு பணி செயல் அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சாதிக்கத் துடிக்கும் உணர்வு - இளம் விஞ்ஞானி வினிஷாவின் கண்டுபிடிப்புகள்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.