அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டை விசாரித்து, மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், சூரப்பா மீது புகார் தெரிவித்தோர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து இக்குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சாட்சியங்கள் முழுமையாக விசாரித்து முடிக்கப்படும் என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துணைவேந்தர் சூரப்பாவை நேரில் விசாரணைக்கு அழைக்க கலையரசன் குழு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: 'பொள்ளாச்சி வழக்கில் இன்னும் பல முக்கிய புள்ளிகள் கைதாவார்கள்'