சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 98 லட்சத்து 64 ஆயிரத்து 60 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 லட்சத்து 99 ஆயிரத்து 255 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 19 ஆயிரத்து 391 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 45 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா உயிரிழப்பு
இன்று (ஆக. 21) தனியார் மருத்துவமனையில் நான்கு பேர், அரசு மருத்துவமனையில் 19 பேர் என மொத்தம் 23 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் கரோனா தொற்று பரவல் 2.7 விழுக்காடாக உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் - எவற்றுக்கு அனுமதி?