சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களில் விலை இன்று(மார்ச்.04) முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது. 1 லிட்டர் ஆவின் நெய் ரூ515-இல் இருந்து ரூ535 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.27-இல் இருந்து ரூ30 ஆகவும் குல்பி ரூ25-இல் இருந்து ரூ30 ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ80-இல் இருந்து ரூ100 ஆகவும் உயர்கிறது.
இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!