ETV Bharat / city

திரைத் துறையில் தடம் பதிக்க வரும் அல்பெரே புரொடெக்ஷன்ஸ்!

author img

By

Published : Oct 21, 2019, 11:41 AM IST

சென்னை : பிரசாத் லேபில் நடைபெற்ற அல்பெரே புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் அறிமுக விழாவில் கில்லர் இன்சைடு, ஜீரோ, ஜெனி ஆப் த புக் ஆகியப் படங்கள் திரையிடப்பட்டன.

திரைத் துறையில் தடம் பதிக்க வரும் அல்பெரே புரோடக்சன்ஸ்!

சென்னையில் உள்ள பிரசாத் லேபில் அல்பெரே புரொடெக்ஷன்ஸ் எனும் கார்ப்பரேட் திரைக்குழுமத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் கில்லர் இன்சைடு, ஜீரோ, ஜெனி ஆப் த புக் ஆகிய மூன்று பைலட் படங்கள் அறிமுகம் செய்யப்பட்டு திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் திருமலை, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜாகுவார் தங்கம், பிஆர்ஓ யூனியன் தலைவர் விஜய் முரளி, செயலாளர் பெரும் துளசி பழனிவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ஜாகுவார் தங்கம், துபாயை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், தமிழ் திரைப்பட உலகில் அடி எடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த மூன்று படங்களுமே ஆங்கிலப் படத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில மொழியில் உள்ள படத்தின் தலைப்புகள் தமிழ் மொழியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.

சென்னை பிரசாத் லேபில் அல்பெரே புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் அறிமுக விழா

பின்னர் பேசிய பிஆர்ஓ யூனியன் தலைவர் விஜய முரளி, "இந்தப் படங்கள் ஆங்கிலப் படங்கள் போன்ற கதை வடிவமைப்பில் எடுக்கப்பட்டுள்ளதால் விருதுகள் பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. நம் மண் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கினால் விருதுகள் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்தார். ஏற்கெனவே திரைத்துறயில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் புதிய கார்ப்பரேட் நிறுவனம் அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

'முதலில் இந்த படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது நான் தான்'- மஞ்சு வாரியர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.