ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டி திமுக சார்பில் மனு - டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டி திமுக சார்பில் மனு

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி திமுக சார்பில் தலைமைச் செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டி திமுக சார்பில் மனு  அளிக்கப்பட்டது

author img

By

Published : Feb 12, 2020, 11:03 PM IST

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என திமுக எம்பி-க்கள் ஆர்.எஸ். பாரதி மற்றும் வில்சன் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி பேசுகையில், தமிழ்நாடு தேர்வாணையத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 90 ஆண்டுகள் நடைபெறாத ஊழல் மோசடி, டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் நடைபெற்றுள்ளது.

ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, வழக்கை விசாரித்து வரும் 3 அதிகாரிகளை இதுவரை மாற்றியுள்ளனர். மேலும் டிஎன்பிஎஸ்சி விவகாரம் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்த வழக்கை சிபிஐ-யிடம் மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது

வழக்கை சிபிஐ வசம் மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கையை தொடர்வோம் என தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் திமுகவில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி வைக்கும் குற்றச்சாட்டை முன் வைக்கிறது என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக விசாரிக்க வேண்டும் என்பதால்தான் சிபிஐ விசாரிக்க கோரிக்கை வைக்கிறோம் என பதிலளித்தார்.

இதையும் படிங்க:

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முக்கியப்புள்ளிக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.