ETV Bharat / city

திடீர் மாரடைப்பால் பேருந்து நிலையத்தில் நின்றவர் உயிரிழப்பு! - a man dead by heart attack

தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

மாரடைப்பால் உயிரிழப்பு
மாரடைப்பால் உயிரிழப்பு
author img

By

Published : Oct 26, 2021, 5:09 PM IST

சென்னை: செங்கல்பட்டை அடுத்த அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (38). இவர், வேலை சம்பந்தமாக தாம்பரம் பேருந்து நிலையம் சென்று நின்றிருந்த நிலையில், திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள், போக்குவரத்து காவல் துறையினர் ஆகியோர் உடனடியாக அவசர ஊர்திக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவசர ஊரதியிலிருந்த பணியாளர், செந்தில் குமாரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

மாரடைப்பால் உயிரிழப்பு

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தாம்பரம் காவல் துறையினர், செந்தில் குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாரடைப்பால் உயிரிழப்பு
மாரடைப்பால் உயிரிழப்பு

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து விழுந்த சிறுவன்... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.