சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, புதிய துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு, தகுதி வாய்ந்த 3 பேரை தேர்வு செய்து, ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அதன்பின், 3 பேரில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்து அறிவிப்பார். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர் 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தர் பதவியை வகிக்க முடியும்.
இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை வரும் ஜூன் 4ஆம் தேதி மாலை 5 மணிவரை, ’ நோடல் அதிகாரி, 577, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், அண்ணாசாலை, சென்னை-15 ’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும், இப்பதவிக்கான தகுதி உள்ளிட்ட மற்ற விவரங்களை, சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சிறு, குறு நிறுவனங்களிடம் ஜிஎஸ்டி வசூல் செய்யக் கூடாது' - மு.க. ஸ்டாலின்