ETV Bharat / city

பொறியியல் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுமா? - பொறியியல் கட்டணம்

சென்னை: பொறியியல் கல்விக் கட்டணங்களை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், மாணவர்கள் சேர்க்கை குறையும் என்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டுமெனக் கேட்க தனியார் பொறியியல் கல்லூரிகள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் பொறியியல் கட்டணம் உயருமா என்று தெரியாத நிலையுள்ளது.

university
university
author img

By

Published : Feb 10, 2020, 3:04 PM IST

பொறியியல் படிப்பிற்கானக் கட்டணங்களை உயர்த்த, அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக தற்போதுள்ள கட்டண விகிதங்களை உயர்த்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிக் கட்டணங்களை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா குழு, பொறியியல் படிப்புகளுக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் முதல், 1 லட்சத்து 58 ஆயிரம் வரை கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தினை தங்கள் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்குக் காரணம் பொறியியல் கட்டணம் குறைவாக உள்ளது என்பது தான் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் 50 முதல் 55 ஆயிரம் வரையிலும், நிர்வாக இட ஒதுக்கீட்டில் 85 முதல் 90 ஆயிரம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் கட்டணத்தில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேராமல் உள்ளனர். பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக் கலந்தாய்வில் சுமார் 75 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண விகிதங்களை தமிழக அரசு நியமித்துள்ள கட்டண நிர்ணயக் குழுவே முடிவு செய்யும். ஆனால், கட்டணக்குழுவின் தலைவர் பதவி காலியாக உள்ளது.

இது குறித்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி கனகராஜிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ”அகில இந்திய தொழில்நுட்பக் கழக விதிமுறைகளின் படி, 7 ஆவது ஊதியக்குழுவின் சம்பளத்தை வழங்க வேண்டும். ஆனால், அதற்கு போதுமான வருவாய் கல்லூரிகளுக்கு கிடைக்கவில்லை. பொறியியல் படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் கல்லூரியை நடத்துவதில் மிகுந்த சிரமம் உள்ளது. எனவே, கல்லூரிகளை 3 வகையாக தரம் பிரிக்க வேண்டும். சிறந்தக் கல்லூரிகளுக்கு கட்டணத்தை உயர்த்தினால் பாதிப்பு இருக்காது. அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே அளவில் கட்டணத்தை உயர்த்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும் ” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஷாகீன் பாக் போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Intro:
பொறியியல் கட்டணம் உயர்த்தப்படுமா?Body:

பொறியியல் கட்டணம் உயர்த்தப்படுமா?

சென்னை,

பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தை உயர்த்தினால் மாணவர்கள் சேரமாட்டார்கள் என்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் கேட்பதற்க தயக்கம் காட்டி வருகின்றன.

பொறியியல் படிப்பிற்கான கட்டணங்களை உயர்த்த  அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. மேலும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக தற்போது உள்ள பொறியியல் படிப்பிற்கான கட்டண விகிதங்களை உயர்த்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ.மற்றும் பி.இ படிப்பிற்கான  கட்டணங்களை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ஸ்ரீ கிருஷ்ணா குழு பொறியியல் படிப்புகளுக்கு  1 லட்சத்து 44 ஆயிரம் முதல் 1 லட்சத்து 58 ஆயிரம் வரை   கட்டணங்களை நிர்ணையித்துள்ளது.

இந்த நிலையில் பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கழகம் நிர்ணம் செய்துள்ள ஊதியத்தினை தங்கள் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் பொறியியல் படிப்பிற்கான கட்டணம்  குறைவாக உள்ளது தான். இந்த நிலையில்தான் தற்போது கட்டண விகிதங்களை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் 50 முதல் 55 ஆயிரம் வரையிலும், நிர்வாக இட ஒதுக்கீட்டில் 85 முதல் 90ஆயிரம்  ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கட்டணத்தில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேராமல் உள்ளனர். தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக் கலந்தாய்வின் போது சுமார் 75 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 1 லட்சத்திற்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் இயங்கும்  தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண விகிதங்களை தமிழக அரசு நியமித்துள்ள கட்டண நிர்ணய குழுவே  முடிவு செய்யும் . ஆனால் கட்டணக்குழுவின் தலைவர் பதவி தற்பாெழுது காலியாக உள்ளது.

இது குறித்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி கனகராஜ் கூறும்போது, அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழுவின் சம்பளத்தை வழங்க வேண்டும். ஆனால் அதற்கு போதுமான வருவாய் கல்லூரிகளுக்கு கிடைக்கவில்லை. பொறியியல் படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் கல்லூரியை நடத்துவதில் மிகுந்த சிரமம் உள்ளது. எனவே கல்லூரிகளை 3 வகையாக தரம் பிரிக்க வேண்டும். சிறந்தக் கல்லூரிகளுக்கு கட்டணத்தை உயர்த்தினால் பாதிப்பு இருக்காது. அனைத்து கல்லூரிக்கு ஒரே அளவில் கட்டணத்தை உயர்த்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.