சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் இன்று (ஜுன் 3) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்ட கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.
அதோடு சென்னை தலைமைச் செயலகத்தில், "கலைஞர் எழுதுகோல் விருது, கலைத் துறை வித்தகர் விருது மற்றும் தமிழறிஞர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கினார். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கையெழுத்தை தங்கத்தில் வடிவமைத்த நபர்