1.இரு நாட்களுக்கு சென்னை திரும்ப வேண்டாம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2.தெப்பக்குளமாகிய சென்னை ரிப்பன் மாளிகை - தேங்கிய மழைநீர்
சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் தாழ்வாக உள்ளதால் மழைநீர் வெளியில் செல்ல வழியில்லாமல் அங்கேயே தங்கும் அவலம் நீடித்து வருகின்றது.
3.பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர்
தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் நடக்கவிருந்த 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
4.பண மோசடி: கணவன், மனைவி உள்பட மூன்று பேர் கைது
சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.54 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவி உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5.புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரியில் நவ.08 மற்றும் 09ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
6.உழைக்கும் மக்களுக்காகத்தான் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார் - எல்.முருகனுக்கு பெரியகருப்பன் பதில்
நூறு நாள் வேலைத்திட்டத்தில் உழைக்கின்ற மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்கவேண்டும் என்ற அக்கறையின் காரணமாகத்தான் தீபாவளிப் பண்டிகையையொட்டி முதலமைச்சர் கடிதம் எழுதினாரே தவிர, இதில் எந்த விதமான அரசியல் ஆதாயத்திற்கான நடவடிக்கையும் இல்லை என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
7.செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட தங்களது உடைமைகள் அனைத்தையும் பத்திரப்படுத்துமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8.ரயில்கள் ரத்து; சில ரயில்களின் நேரம் மாற்றம் - ரயில்வே நிர்வாகம்
தொடர்மழை காரணமாக சென்னையிலிருந்து மாலை புறப்பட்டுச் செல்லும் சில ரயில்கள் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
9.அதிர்ச்சி... கறுப்பு நிறமாக மாறிய மெரினா - ஏன் தெரியுமா?
சென்னையில் மழைக் காரணமாக ஆறுகள் நிரம்பி, வெள்ள நீருடன் சாக்கடை கழிவுகளும், குப்பைகளும் அதிகளவு மெரினாவில் கலந்து கறுப்பு நிறமாக மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.
10.பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் தீவிரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்