ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச்சுருக்கம் Top Ten 10 @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச்சுருக்கம்.

இரவு 9 மணி
இரவு 9 மணி
author img

By

Published : Aug 22, 2021, 9:12 PM IST

1.மணிப்பூர் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள இல. கணேசனுக்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசனுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

2.பவானிசாகர் அணையில் இருந்து நீர் நிறுத்தம்: பொதுப்பணித்துறை

கீழ்பவானி வாய்க்காலின் கரையைப் பலப்படுத்தும் வரை பவானிசாகர் அணையில் இருந்து நீர் நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

3.படிக்கவே மாட்டிங்குறான் நல்லா அடிங்க... அண்ணனை வாத்தியாரிடம் போட்டுக்கொடுத்த குட்டி தங்கை

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி வாத்தியாரிடம் தனது அண்ணனை, தங்கை மாட்டிவிடுகிறார். தனது பிஞ்சு மொழியால் அவர் கோள்மூட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

4.திரையரங்குகளில் இனி கட்டண உயர்வில்லை: திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர்

திரையரங்குகளில் பார்வையாளர்களிடம் வாங்கும் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

5.2022இல் கேஜிஎஃப் 2 நிச்சயம் ரிலீஸ் - நடிகர் யாஷ் உறுதி

கரோனா பெருந்தொற்று காரணமாக தமாதமாகும் கேஜிஎஃப் 2 திரைப்படம் 2022ஆம் ஆண்டில் நிச்சயம் ரிலீஸ் ஆகும் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.

6.விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல் - உயிர் தப்பிய 6 தமிழ்நாட்டு மீனவர்கள்

ராமேஸ்வரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதால், விசைப் படகுகள் நல்வாய்ப்பாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர்.

7.மரத்துக்கு ராக்கி கட்டி அசத்திய பிகார் முதலமைச்சர்

மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை, குறிப்பால் உணர்த்தும் விதமாக பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மரத்துக்கு ராக்கி கட்டியுள்ளார்.

8.மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் களமிறங்குகிறார் எம்.எம். அப்துல்லா

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

9.அண்ணன்களுக்கு தங்கைகள் தான் எல்லாம்; அவர்களின் உலகமே அதுதான்

அண்ணனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் 'தங்கை தான் எல்லாம். அவர்களின் உலகமே அது தான்'. அப்படி வாழும் அனைவருக்கும் இனிய ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்.

10.அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் தமிழ்நாட்டுக்கு நலன் - அண்ணாமலை

தமிழ்நாட்டில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், அது தமிழ்நாட்டின் நலனுக்கு பலன் தருவதாக அமையும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.