ETV Bharat / city

சுமார் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை

தமிழ்நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் ரூ. 9.02 லட்சம் மதிப்புள்ள காலவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ே
author img

By

Published : Mar 20, 2022, 7:47 AM IST

சென்னை: உணவு பாதுகாப்பு துறையின் மூலம் குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கடந்த பிப்ரவரி 2022இல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேற்கண்ட ஆய்வின்போது, 5 ஆயிரத்து 777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வின் தொடர்ச்சியாக, ரூபாய் 9.02 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கடைகளில் எடுக்கப்பட்ட குளிர்பானங்களின் மாதிரிகள் உணவு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிறுவனங்களின் கவனத்திற்கு...

குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும், குளிர்பானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்னர் நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006, ஒழுங்கு முறைகள்-2011இன் படி குளிர்பான பாட்டில்கள் மீது உள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறை உரிமை எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முழுமையான முகவரி, நிகர எடை, லாட் / கோடு / பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்தக் கூடிய கால அளவு, அனுமதிக்கப்பட்ட இயற்கை நிறங்கள், அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறங்கள் குறித்த தகவல், ஊட்டச்சத்து குறித்த தகவல், சைவ மற்றும் அசைவ குறியீடு உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மக்களின் கவனத்திற்கு...

மேலும், குளிர்பான பாட்டில்களில் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்கள் குளிர்பான நிறத்திலிருந்து மாறுபட்டு, பார்த்தவுடன் தெளிவாக தெரியும் வகையில் அச்சிட குளிர்பான நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிர்பானங்கள் கடைகளில் வாங்கும்போது மேற்குறிப்பிட்ட விவரங்கள் உள்ளதா எனவும், குறிப்பாக காலாவதி நாளை சரி பார்த்தே வாங்கி உபயோகிக்க வேண்டும்.

தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏபிவிபி முன்னாள் தேசியத் தலைவர் வன்கொடுமை சட்டத்தில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.