ETV Bharat / city

அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைத்திட ஐஏஎஸ் அலுவலர்களைக் கொண்ட 9 குழுக்கள்!

சென்னை: மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் தடையின்றி கிடைத்திட மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் கொண்ட 9 குழுக்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Mar 26, 2020, 10:12 PM IST

9 Groups of IAS Officers to provide essential requirements unhindered

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு 9 குழுக்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய அரசு தொடர்புகள் குழுவில் பொதுத்துறை முதன்மைச் செயலர் செந்தில் குமார், வருவாய்த் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் பங்கஜ் குமார் பன்சால், தமிழ்நாடு மின்னணு ஆளுமை ஆணையர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் உள்ளனர்.

அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல் குழுவில், உணவுப் பொருள் வழங்கல் துறைச் செயலர் தயானந்த கட்டாரியா, வேளாண் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் செயலர் சந்திரமோகன், ஏடிஜிபி தாமரை கண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏனைய குழுவில் உள்துறைச் செயலர் பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.