ETV Bharat / city

அண்ணா பிறந்த நாள்; 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - வெளியானது அரசாணை

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணை
தமிழ்நாடு அரசு அரசாணை
author img

By

Published : Nov 25, 2021, 1:05 PM IST

சென்னை: அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ’அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் முன்விடுதலை செய்யப்படுவார்கள்' என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதை நடைமுறைப்படுத்தவதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவைச் செயல்படுத்தும்விதமாக சட்டம் 161இன் விதிப்படி 700 ஆயுள் தண்டனை கைதிகள் முன்விடுதலை செய்யப்பட இருக்கின்றனர்.

மேலும், 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்தவர்கள், மத ரீதியான சண்டை, பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் எனவும், சிறையில் நன்னடத்தை உடன் நடந்துகொண்டவர்கள் விதிகளுக்குள்பட்டு விடுதலை செய்யப்பட இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாடங்களை முழுவதும் புரியும்படி நடத்த வேண்டும் - கல்லூரிக் கல்வி இயக்குநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.