1.ஓணம் பண்டிகை - முதலமைச்சர் வாழ்த்து
அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2.கல்யாண் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்த யோகி ஆதித்யநாத்!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நிலை குறித்து மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.
3.14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
4.கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகலாம் - ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும், 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், பொது மக்கள் தங்கள் பகுதியில் முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5.'ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கிடங்காக துருக்கி இருக்காது'
தாலிபான்கள் ஆட்சியில் இருந்து தப்பித்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக ஆப்கானியர்கள் விரும்பும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் தங்களுடைய நாடுகளில் ஆப்கன் அகதிகளை ஏற்க மறுக்கும் சமிக்ஞைகளை காட்டிவருகிறது.
6.‘குடும்பம் குட்டிங்க இருக்காங்க... பாத்து சூதானமா போங்க...’- மதுரை மக்களை கவர்ந்த உதவி ஆய்வாளர்
போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, அனைவரிடமும் பாராட்டைபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் குறித்த சிறப்பு தொகுப்பு...
7.‘சூரரைப் போற்று' - நடிகர் சூர்யாவுக்கு விருது
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இரண்டு விருதுகளைக் வென்றுள்ளது. சிறந்த படத்திற்கான விருது சூரரைப் போற்று திரைப்படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவுக்கும் கிடைத்துள்ளது.
8.சைடஸ் காடில்லா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அரசு நிபுணர் குழு ஒப்புதல்
சைடஸ் காடில்லா கரோனா தடுப்பூசியை அவரச கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
9. இளைஞர்கள் சுயமாக தொழில் செய்ய வழிகாட்டுங்கள் - அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு
போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதை தடுக்க, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
10. கராத்தே சாகசம் செய்த மாணவர் தீயில் கருகிய சோகம்!
கராத்தே மாணவர் சாகசம் செய்யும்போது, உடலில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.