ETV Bharat / city

சென்னையில் மரங்கள் விழுந்து 7 கார்கள், 2 ஆட்டோக்கள் சேதம் - காவல் துறை

நிவர் புயலின் காரணமாக சென்னையில், மரங்கள் விழுந்து ஏழு கார்கள், இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

cars damaged
cars damaged
author img

By

Published : Nov 26, 2020, 2:14 PM IST

சென்னை: சென்னையில் நிவர் புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையை தடுப்பதற்காக மாநகர காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பாக தனியாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்களின் அவசர அழைப்புக்கு உடனடியாக விரைந்து சென்று உதவிட ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவலர்கள் மூலம் 12 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரம் வெட்டும் பணியில் காவலர்கள்
மரம் வெட்டும் பணியில் காவலர்கள்

அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு தகுந்த உதவிகளையும் செய்து வந்தனர்.

மரங்களை அப்புறப்படுத்தும்  காவலர்கள்
மரங்களை அப்புறப்படுத்தும் காவலர்கள்
மழையினால் விழுந்த மரங்கள் மற்றும் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து அப்புறப்படுத்தும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை நீர் தேங்கியுள்ள சாலைகளில் இடர்பாடுகள் மற்றும் பள்ளம் இருந்தாலோ காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை எச்சரித்தும் வருகின்றனர். சென்னையில், 24ஆம் தேதி முதல் இன்று (25) அதிகாலைவரை பெய்த கனமழையினால் வடபழனி, கோடம்பாக்கம், அசோக் நகர், பெரவள்ளூர், எழும்பூர், அபிராமபுரம், யானைகவுனி உள்ளிட்ட 80 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் காற்றில் சாய்ந்த 102 பெரிய மரங்களை காவலர்கள் மற்றும் மாநகராட்சியினர் இணைந்து அப்புறப்படுத்தியதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த மரங்கள் விழுந்ததில் ஏழு கார்கள் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.