சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.
அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். அப்போது கடலூரைச் சோ்ந்த பஷலூதீன் (26) என்ற பயணி,வெளியே சென்றார். ஆனால் சுங்கத் துறையினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்தப் பயணியை மீண்டும் உள்ளே அழைத்துவந்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைந்த்து வைத்திருந்த 3 பிளாஸ்டிக் குப்பிகளில் 648 கிராம் தங்க பேஸ்ட் இருந்தது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.31.5லட்சம். இதையடுத்து பயணி பஷலூதீனை சுங்கத் துறையினா் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்..