சென்னை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டப் புகையிலை பொருள்களை ஒழிப்பதற்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் காவல் துறையினர், புகையிலைப் பொருள்களை ஒழிப்பதற்கான சிறப்பு சோதனைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 7 நாள்களில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தியவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் என 57 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவர்களிடமிருந்து 149 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள், 152 கிலோ மாவா, இருசக்கர வாகனம், 25ஆயிரத்து 430 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் பெரும்பாக்கம், மாதாவரம், நீலாங்கரை, கண்ணகி நகர் ஆகியவை காவல் நிலைய எல்லைகளில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவதால் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்
இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா விற்பனை: 2 நாள்களில் 65 பேர் கைது!