ETV Bharat / city

தமிழ்நாட்டில் கடைசி 5 மாதங்களில் ரூ. 56,000 கோடிக்கு முதலீடு, 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டாலின் முதலமைச்சராகி 200 நாள்கள் நிறைவு

தமிழ்நாட்டில் கடைசி ஐந்து மாதங்களில் 56 ஆயிரத்து 229 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், mk stalin, cm stalin
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
author img

By

Published : Nov 27, 2021, 6:16 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், ஐந்து மாதங்களில் 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இதன்மூலம் 56 ஆயிரத்து 229 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு, ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 999 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், mk stalin, cm stalin
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பரவலாக்கப்படும் திட்டப் பணிகள்

தமிழ்நாடு அரசின் பல துறைகள் வாயிலாகப் பெறப்பட்டுள்ள இந்த முதலீடுகள் எரிசக்தி நிலையங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழிற் பூங்காக்கள், வர்த்தகக் கிடங்கு மையங்கள், வான்வெளி - பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் - சேவைகள், பொது உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், காலணிகள், மருந்துப் பொருள்கள், ஜவுளி போன்ற பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்திடும் வகையில் இந்த முதலீடுகள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவலாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: No 1 Chief Minister Stalin: 'நான் தான் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர்' - கோவையில் ஸ்டாலின் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.