ETV Bharat / city

தொழிற்சாலை கெமிக்கல் கசிவு... விஷவாயு தாக்கி 4 பேர் கவலைக்கிடம்... - 108 Ambulance

சென்னையில் தொழிற்சாலை கெமிக்கல் கசிந்ததால் விஷவாயு தாக்கி 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

தொழிற்சாலை கெமிக்கல் கசிவு... விஷவாயு தாக்கி 4 பேர் கவலைக்கிடம்...

author img

By

Published : Oct 4, 2022, 9:36 PM IST

சென்னை: கொடுங்கையூர் சாஸ்திரி நகர் விரிவுசாலையில், கடந்த 22 வருடங்களாக தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ பாலாஜி எண்டர்பிரைசஸ் கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இரண்டு பெண்கள் உட்பட ஆறு நபர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தினை, சென்னை கொடுங்கேரி சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த தொழிற்சாலையை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. சொல்யூஷன் தயாரிக்கும் இயந்திரத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, அந்த இயந்திரத்தின் அடிபாகம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து சொலுஷன் அனைத்தும் வெளியேறியிருக்கிறது.

இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த கொடுங்கையூரைச் சேர்ந்த அமுதவல்லி, தேன்மொழி மற்றும் முதலாளி வெங்கடேசன் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இவர்களின் மயக்க நிலையை கண்ட மற்றொரு ஊழியரான சுரேஷ் இவர்களை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தபோது அவரும் விஷவாயு தாக்குதலுக்குள்ளானார்.

நான்கு பேரும் மயங்கி கிடந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு. தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மகளிருக்கான இலவசப்பேருந்து கட்டணம் ரத்தா? - அலுவலர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.