நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால், கரோனா தடுப்பூசிகளின் தேவையும் அதிகரித்து வருகின்றன.
தற்போது, மக்களும் தொடர்ந்து கரோனா தடுப்பூசிகள் செலுத்தி வருவதும், இந்த தேவை அதிகரிப்புக்குக் காரணம்.
4 லட்சம் தடுப்பூசிகள்
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை, தற்போது படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கரோனாவைத்தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதனடிப்படையில், தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில், புனேயிலிருந்து விமானம் மூலம் இன்று (ஆக. 25) 40 பார்சல்களில், நான்கு லட்சத்து 71 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
பற்றாக்குறை மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள்
இந்தத் தடுப்பூசி பார்சல்களை மாநில மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்கிற்குக் கொண்டுசென்றனர்.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள், 'இந்தத் தடுப்பூசிகள் அனைத்தையும் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: 1,98,415 பயனாளிகள் பயனடைந்தனர்'