ETV Bharat / city

அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 பேராசிரியர் பணியிடங்கள் காலி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 300க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலத்தில் நிரப்பப்படாமல் காலியாக இருந்துள்ளது.

300 professor posts vacant at Anna University

author img

By

Published : Apr 23, 2021, 11:55 AM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட நான்கு வளாக கல்லூரிகளிலும் 900 பேராசிரியர்கள் பணியிடங்கள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர்களாக பணிபுரிபவர்கள் ஓய்வு பெற்ற பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உரிய தகுதியின் அடிப்படையில் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்ற சூரப்பா தனது பதவிக்காலத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உதவிப் பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியில் உள்ளவர்கள் பதவி முடிவதற்கு 6 மாதம் முன்னர் புதியதாக எந்தவிதமான பணி நியமனங்களும் செய்யக்கூடாது என்ற விதிமுறையை மீறி அவர் செயல்பட்டார்.

இதனால், பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க அரசு தரப்பில் நியமிக்க வேண்டிய தேர்வுக்குழு உறுப்பினரை நியமிக்க வலியுறுத்தி, துணைவேந்தர் சூரப்பா உயர்கல்வித்துறைக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அதற்கான உறுப்பினரை நியமித்து அரசு உத்தரவிடவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பணிபுரிந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கையால் 900 பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் தற்போது 550க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.