ETV Bharat / city

300 கோடி ரூபாய் மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: 300 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 23, 2020, 2:23 PM IST

நிதி நிறுவனம் ஆரம்பிப்பதாகக் கூறி துளசி மணிகண்டன் என்பவரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பண மோசடியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, ஜூலை 24ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். இதைத்தொடர்ந்து, கரோனா தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் அல்லது காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூலை 23) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த மோசடியில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் கூட தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் ஞானவேல் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மூன்று கோடி ரூபாய் மோசடியை காவல்துறையினர் 300 கோடி என தவறாக குறிப்பிடுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே ஞானவேல் ராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஞானவேல் ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த மோசடி வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, நேரில் ஆஜராக தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.