சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து கரோனா பரிசோதனை செய்ததில் 3 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று(மே 24) வரை மொத்தம் 6 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று(மே 25) மேலும் மூன்று மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.