தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி கோருவது தொடர்பாக டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது திட்டங்களை தொடங்கிவைக்க தமிழ்நாடு வருமாறு பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
3 மணி நேரம் மட்டுமே இங்கு இருக்கப்போகும் அவரது பயண விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,
- பிரதமர் மோடி இன்று காலை 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 10.35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
- விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் கப்பல் தளத்திற்கு செல்கிறார்.
- அங்கிருந்து கார் மூலம், காலை 11.15 மணியில் இருந்து 12.30 மணி வரை, நேரு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
- காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- 12.50 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் தளத்துக்கு காரில் செல்கிறார்.
- அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு 1.30 மணிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் மோடி, தனி விமானம் மூலம் 1.35 மணிக்கு கேரள மாநிலம் கொச்சி செல்கிறார்.
சென்னையில் பிரதமர் மோடி மூன்று மணி நேரம் மட்டுமே பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சிக்காக, மாநகரம் முழுவதும் 6 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் தீ விபத்து: நிவாரண நிதி வழங்கும் பிரதமர் மோடி!