சென்னையில் உள்ள பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் 263ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் சென்னையில் சீரமைக்கப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், புதிதாகக் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை, தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் தற்போதய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வெளிநாடு சென்று அறிந்த தொழிநுட்பங்களை தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்தும் துணை முதலமைச்சர் ஆலோசித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் வைரமுத்து, வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், நிதித்துறை அரசு சிறப்புச் செயலர் பூஜா குல்கர்னி, சென்னை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் த.ந.ஹரிஹரன், நகர் ஊரமைப்பு இயக்குநர் சந்திரசேகர் சாகமூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பாஜகவை கழட்டிவிடுவோம் ... இல்ல எங்கள பிரிக்க முடியாது - உளறிய அமைச்சர் பாஸ்கரன்!