ETV Bharat / city

ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்... இருமலுக்கு ஊசி போட்ட மருத்துவர்! எப்படி நிகழ்ந்தது மரணம்?

சென்னை: பல்லாவரத்தில் உள்ள ஜெயம் மருத்துவமனை, இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததை தொடர்ந்து, அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை 23 வயது இளம் பெண் மரணம்  23-year-old girl dies after worst treatment  chennai hospital worst treatment  ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்
ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்
author img

By

Published : Nov 28, 2019, 10:00 PM IST

Updated : Nov 28, 2019, 11:55 PM IST

சென்னை: பல்லாவரத்தில் உள்ள ஜெயம் மருத்துவமனை, இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததினால் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(23). இவர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வேலை தேடி வருகிறார். இச்சூழலில் நித்யாவிற்க்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர்களுடன் அனகாபுத்தூரில் உள்ள ஜெயம் என்ற தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்குச் சென்ற போது அங்கிருந்த மருத்துவர் சுஜாதா கருணாகரன் நித்தியாவை பரிசோதித்து ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது.

ஊசி போட்ட சில நிமிடத்தில் நித்யா மருத்துவமனையிலே மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த மருத்துவர் நித்யாவை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த நித்யாவின் பெற்றோர் நித்யாவை அழைத்துக் கொண்டு வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

காணாமல் போன பெண் சடலமாக கிணற்றிலிருந்து மீட்பு!

ஆனால் அங்கும் நித்யாவிற்கு சிகிச்சை அளிக்காமல், மீண்டும் அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி அலட்சியமாகக் கூறியுள்ளனர். அங்கிருந்து நித்யாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நித்யாவை பரிசோதனை செய்த மருத்துவர் நித்யாவின் உயிர் பிரிந்து அரை மணி நேரமாகி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்டு நித்யாவின் பெற்றோர் கதறி அழுதனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் தங்களது பெண் இறந்துவிட்டதாக நித்யாவின் பெற்றோர் மருத்துவமனை வாசலில் கதறி அழுதது, கல் நெஞ்சையும் கரைக்கும் படி இருந்தது. உடனடியாக இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் நித்யாவின் உறவினர்கள், அவருக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளனர்.

மாமுல் வேட்டையில் ஈடுபட்ட கள்ள போலீஸ் கைது..!

ஆனால் இச்சம்பவம் சங்கர் நகர் காவல்துறைக்குட்பட்ட அனகாப்புத்தூர் தனியார் மருத்தவமையில் நடந்ததால், அங்கும் அவர்களை அலைக்கழித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி கூறியிருக்கின்றனர். பின்னர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் சங்கர் நகர் காவல்துறையினர் புகாரை ஏற்காததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து காவல் துறையினர் உடற்கூறாய்வுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் உடற்கூறாய்வுக்கு போதிய வசதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இல்லாததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்படும் என காவல்துறை தெரிவித்தது.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது!

இதனையடுத்து உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்தவுடன் துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர்.

Intro:தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் 23 வயது இளம் பெண் உயிரிழப்பு
Body:தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் 23 வயது இளம் பெண் உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா(23) இவர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வேலை தேடி வருகிறார்,

இந்நிலையில் நித்யாவிற்க்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர்களுடன் அனகாபுத்தூரில் உள்ள ஜெயம் என்ற தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சென்ற போது அங்கிருந்த மருத்துவர் சுஜாதா கருணாகரன் நித்தியாவை பரிசோதித்து ஊசி போட்டதாக கூறப்படுகிறது...

ஊசி போட்ட சில நிமிடத்தில் நித்யா மருத்துவமனையிலே மயங்கி கீழே வாழ்ந்தார் பின்னர் அங்கிருந்த மருத்துவர் நித்யாவை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்..

அதிர்ச்சி அடைந்த நித்யாவின் பெற்றோர்கள் நித்யாவை அழைத்து கொண்டு வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் அங்கும் நித்யாவிற்க்கு சிகிச்சை அளிக்காமல் மீண்டும் அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி அலச்சியமாக கூறியுள்ளனர்..

அங்கிருந்து நித்யாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு நித்யாவை பரிசோதனை செய்த மருத்துவர் நித்யாவின் உயிர் பிரிந்து அரை மணி நேரமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர் அதை கேட்டு நித்யாவின் பெற்றோர்கள் கதறி அழுதனர்...மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் தங்களது பெண் இறந்துவிட்டதாக நித்யாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் நித்யாவின் பெற்றோர் தன் மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். அனால் இச்சம்பவம் சங்கர் நகர் காவல்துறைக்கு உட்பட்ட அனகாப்புத்தூர் தனியார் மருத்தவமையில் நடந்ததால் சங்கர்நகர் காவல் நியையத்தில் புகார் அளிக்கும்படி கூறியிருக்கின்றனர்

பின்னர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் ஆனால் சங்கர்நகர் காவல்துறையினர் புகாரை ஏற்க்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டாம் நடத்தினர்.இதையடுத்து காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்பு போராட்டாம் கைவிடப்பட்டது

பின்னர் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு போதிய வசதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இல்லாததால் ராஜீவ்காந்தி அரசு மருத்த்மையில் உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தெறிவித்தது. பின்னர் உடலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர் உடற்கூறு ஆய்வு முடிவு வந்தவுடன் துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர்Conclusion:
Last Updated : Nov 28, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.