ETV Bharat / city

சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை சுற்றிவளைத்த போலீசார்!

author img

By

Published : Apr 10, 2022, 7:03 AM IST

ஆலந்தூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை பரங்கிமலை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம், ஸ்வைபிங் மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்
பறிமுதல்

சென்னை ஆலந்தூர், எம்.கே.என்.சாலை, காந்தி மார்கெட், நாகூர் டிம்பர் டிரேடர்ஸ் உள்ளிட்டப் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர், பரங்கிமலை காவல் உதவி ஆணையர் அமீர் அகமதிடம் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உதவி ஆணையரின் தலைமையிலான தனிப்படை காவலர்கள், அங்கு சென்று சோதனையிட்டதில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

23 பேர் கைது: பின்னர், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவஹரி(32), விஜயகுமார்(57), ரவிச்சந்திரன்(56), மூர்த்தி(54), மணி(56), பிரசாந்த(27), ராஜ்(56), ஜோதிமுத்து(52), மது(47), சாம்பசிவராவ்(45), ராதாகிருஷ்ணன்(57), விக்னேஷ் (31) உள்பட மொத்தம் 23 பேரை கைது செய்தனர். ஏனைய பலரும் காவல் துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதன்பின், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.20 ஆயிரம் பணம், சீட்டுக்கட்டுகள், ஸ்வைப்பிங் மெஷின் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடந்த 4 மாதங்களுக்கு மேல், புனித தோமையார் மலை காவல் நிலைய ஆய்வாளர் ஜேக்கம் ஜெர்ரிக்கு தெரிந்தே இந்த சூதாட்டம் நடைபெற்றதாகவும், மாதாமாதம் மாமூல் பெற்றுக் கொண்டு, சூதாட்டத்தை கண்டும் காணாமல் இருந்ததாலும், உளவுத்துறையின் தகவலின் பேரில் உதவி ஆணையர் அவரது தனிப்படையை வைத்து சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம் எனும் சவக்குழி; தப்பிக்க வழி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.