ETV Bharat / city

சென்னை உயர் நீதிமன்ற கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் மாலா, சவுந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 2 வழக்கறிஞர்கள் நியமனம்!

author img

By

Published : Mar 24, 2022, 6:46 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகள் பதவிகளில் 16 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முயற்சியாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள ஆறு பேரை நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பரிந்துரை செய்தது.

அதன்படி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான என். மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர். ஜான் சத்யன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் மாலா, சவுந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களின் பதவிக்காலம் பதவியேற்றதில் இருந்து 2 ஆண்டுகள் ஆகும்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்ததுடன் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: 'பாதுகாக்கப்பட வேண்டிய கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது... உயர் நீதிமன்றம்...'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.