சென்னை: நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில், செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நேற்று(நவ.1) 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் பல மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருகின்றனர்.
முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் நலன் கருதி பாடங்கள் குறைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது ஒன்று முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடும், ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 விழுக்காடும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு பாடம் எடுக்கப்பட்டுவருகிறது. எனவே மாணவர்கள் பெரும்பாலான பாடங்களை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கற்றல் திறனில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும், குறைந்த காலத்தில் கல்வி கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதையும் படிங்க: கனமழை: 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை