இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து ஆயிரத்து 874 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டன. அவர்களில் 2 ஆயித்து 58 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 97 ஆயிரத்து 908 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆயிரத்து 908 பேரின் ரத்தம்,சளி பரிசோதனை ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 8 ஆயிரத்து 685 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 27 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை ஆயிரத்து 138 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 902 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 121 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 80 ஆண்களும் 41 பெண்களும் உள்ளனர்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஏப்ரல் 27) வரை 1,937 பேருக்கும், இன்று 121 பேருக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 58 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வரை 24 பேர் உயிரிழந்தனர். இன்று ஒருவர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். 902 நோயாளிகள் நல்ல நிலையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 1,392 ஆண்களும், 666 பெண்களும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 103 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று பேரும், நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவரும் என 121 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 37 மாவட்டங்களின் நிலவரம்:
- சென்னை மாவட்டம் 673
- கோயம்புத்தூர் மாவட்டம் 141
- திருப்பூர் மாவட்டம் 112
- திண்டுக்கல் மாவட்டம் 80
- மதுரை மாவட்டம் 79
- ஈரோடு மாவட்டம் 70
- செங்கல்பட்டு மாவட்டம் 70
- திருநெல்வேலி மாவட்டம் 63
- நாமக்கல் மாவட்டம் 61
- தஞ்சாவூர் மாவட்டம் 55
- திருவள்ளூர் மாவட்டம் 53
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் 51
- விழுப்புரம் மாவட்டம் 48
- நாகப்பட்டினம் மாவட்டம் 44
- தேனி மாவட்டம் 43
- கரூர் மாவட்டம் 42
- ராணிப்பேட்டை மாவட்டம் 39
- தென்காசி மாவட்டம் 38
- விருதுநகர் மாவட்டம் 32
- சேலம் மாவட்டம் 31
- திருவாரூர் மாவட்டம் 29
- தூத்துக்குடி மாவட்டம் 27
- கடலூர் மாவட்டம் 26
- வேலூர் மாவட்டம் 22
- காஞ்சிபுரம் மாவட்டம் 20
- திருப்பத்தூர் மாவட்டம் 18
- கன்னியாகுமரி மாவட்டம் 16
- திருவண்ணாமலை மாவட்டம் 15
- ராமநாதபுரம் மாவட்டம் 15
- சிவகங்கை மாவட்டம் 12
- நீலகிரி மாவட்டம் 9
- கள்ளக்குறிச்சி மாவட்டம் 9
- பெரம்பலூர் மாவட்டம் 7
- அரியலூர் மாவட்டம் 6
- புதுக்கோட்டை மாவட்டம் 1
- தருமபுரி மாவட்டம் 1