சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்தனர்.
அப்போது ஆசிரியர் ஒருவர், 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவருக்கு 10 மதிப்பெண்கள் போட்டுவிட்டு, 90 மதிப்பெண்களைப் பதிவு செய்யாமல் விட்டதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற தவறுகளில் 38 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, 50 முதல் 60 மதிப்பெண்களை குறைத்துப் பதிவு செய்தது தெரியவந்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பீட்டில் தவறு செய்த ஆசிரியர்களிடம் அரசுத்தேர்வுத்துறை விசாரணை நடத்த உள்ளது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியைப்போல் திருவள்ளூரிலும் பள்ளி மாணவி மரணம்; காவலர்கள் குவிப்பு!