ETV Bharat / city

அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்க நகை கொள்ளை - ஆடி மாதம் திருவிழா

சென்னை எம்.கே.பி நகர் கோயிலில் அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்க நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 8, 2022, 7:09 AM IST

சென்னையில் தற்போது ஆடி மாதம் திருவிழா என்பதால் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் சென்னை எம்கேபி நகரில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி அம்மன் சிலைக்கு 10 சவரன் தங்க நகைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

etv

இதை நோட்டமிட்ட கொள்ளையன் ஒருவன், நேற்று அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்க நகையை திருடி ஓட்டம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக எம்கேபி நகர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின் அங்கு வந்த காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

etv

அப்போது அம்பத்தூர் கள்ளிகுப்பத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதனைத்தொடரந்து அவரை கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.

இதையும் படிங்க: 'பா.ரஞ்சித் பகிரங்க மன்னிப்பு கேட்கனும்' - பௌத்த அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.