ETV Bharat / business

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு... - ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் 61 பைசா சரிந்து முதன்முறையாக ரூ. 83.01 ஆக உள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

author img

By

Published : Oct 19, 2022, 10:26 PM IST

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் 61 காசுகள் சரிவைச் சந்தித்தது. அந்நிய முதலீடு வெளியேற்றம் மட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

வர்த்தக நேரத் துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.32 ஆக இருந்த நிலையில், பிறகு 61 காசுகள் சரிந்து ரூபாயின் மதிப்பு ரூ.83.01 ஆக இருந்தது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 82.40 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரீன்பேக் டாலர் குறியீடு, 0.31 சதவீதம் அதிகரித்து 112.48 ஆக இருந்தது. உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எதிர்காலம் ஒரு பீப்பாய்க்கு 0.82 சதவீதம் உயர்ந்து 90.77 அமெரிக்க டாலராக இருந்தது.

உள்நாட்டு ஈக்விட்டி சந்தையில், 30-பங்கு பிஎஸ்இ சென்செக்ஸ் 146.59 புள்ளிகள் அல்லது 0.25 சதவீதம் அதிகரித்து 59,107.19 ஆக முடிந்தது. அதே நேரத்தில் பரந்த என்எஸ்இ நிஃப்டி 25.30 புள்ளிகள் அல்லது 0.14 சதவீதம் முன்னேறி 17,512.25 ஆக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய் அன்று ரூ.153.40 கோடி மதிப்புள்ள பங்குகளை எடுத்துச் சென்றதால், மூலதனச் சந்தைகளில் நிகர விற்பனையாளர்களாக இருந்தனர் என்று பரிமாற்றத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: எதிர்பாராத செலவினங்களை தவிர்க்க மருத்துவ காப்பீடு செய்யுங்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.