ETV Bharat / business

எதிர்பாராத செலவினங்களை தவிர்க்க மருத்துவ காப்பீடு செய்யுங்கள்.. - மருத்துவ காப்பீடு செய்யுங்கள்

மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டியது அவசியமா என்று சிலர் கேட்கிறார்கள். சிறு வயதிலேயே அதனை செய்வது எப்போதும் பாதுகாப்பானது.

மருத்துவ காப்பீடு செய்யுங்கள்
மருத்துவ காப்பீடு செய்யுங்கள்
author img

By

Published : Oct 18, 2022, 10:30 PM IST

Updated : Nov 28, 2022, 4:00 PM IST

ஹைதராபாத்: குடும்பத்தில் எதிர்பாராத செலவினங்களைச் சந்திக்க முழுமையாகத் தயாராக இல்லை என்றால், நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். இதுபோன்ற எதிர்பாராத செலவினங்களைத் தவிர்க்க, ஒவ்வொருவரும் காப்பீடு செய்யத் தயாராக வேண்டும்.

குறிப்பாக மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. அவசரக் காலங்களில் அது உதவும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.வயதானோர் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நோய்கள் அதிகரித்து வருகின்றன. 30 வயதைத் தாண்டியவுடன், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர்.

சிறு வயதிலேயே இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. மருத்துவ காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவ காப்பீடு செய்ய வேண்டிய தொகையைத் தேர்ந்தெடுப்பதுதான். ஒரு தனிநபர் பாலிசிக்கு செல்ல வேண்டுமா அல்லது முழு குடும்பத்தையும் உள்ளடக்கும் பாலிசிக்கு செல்ல வேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

குடும்ப பாலிசிகளை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. காலப்போக்கில் பணவீக்கம் உயரும். ஹெல்த் பாலிசிகளை நாம் எடுக்க மொத்த தொகையைத் தேர்ந்தெடுக்கும்போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வாழ்வின் இறுதி வரை நம்மைக் கவனித்து கொள்ளும் பாலிசியே சிறந்தது.

நல்ல பாலிசி நிறுவனங்களைத் தேர்வு செய்வது அவசியம். பலர் மிகவும் சாதாரணமாக இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள், மேலும் சிலர் ஹெல்த் பாலிசி எடுக்க வேண்டியது அவசியமா என்று கேட்கிறார்கள். சிறு வயதிலேயே மருத்துவ காப்பீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. பாலிசி எடுப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்படுகின்றன.

அதிக எடை இருந்தால், பாலிசிகள் கொடுக்க நிறுவனங்கள் தயங்கும். அப்படிக் கொடுத்தாலும் அதிக பிரீமியத்தை வசூலிக்கிறார்கள். நிறுவனங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு கவரேஜ் கொடுக்காது. உடனடியாக இழப்பீடு வழங்கப்படாது. எனவே, ஆரோக்கியமாக இருக்கும்போது மருத்துவக் காப்பீடு எடுப்பது நல்லது.

பாலிசியை எடுப்பதற்கு முன் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும். எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் பாலிசி உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சில பாலிசிகள் மூலம் மருத்துவமனை அறை, ஐசியு மற்றும் சிகிச்சைக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே வழங்கப்படும்.

இந்த பாலிசிகளை தவிர்க்க வேண்டும். பாலிசியானது மருத்துவமனைக்கு செல்வதற்கு முந்தைய செலவுகள் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஏற்படும் செலவுகளை உள்ளடக்கும். வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கான வசதி இருக்க வேண்டும். அதிக நெட்வொர்க் மருத்துவமனைகளைக் கொண்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க: டிஜிட்டல் தங்கம் - ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்!

Last Updated : Nov 28, 2022, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.