ETV Bharat / business

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு - மும்பை பங்குச் சந்தை கிடுகிடு உயர்வு!

பங்குச் சந்தை வளர்ச்சி எதிரொலியால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் 74 காசுகளாக உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை
author img

By

Published : Nov 11, 2022, 2:09 PM IST

மும்பை: வாரயிறுதி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அதிகரிக்கத் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்ளில் 1,100 புள்ளிகள் அதிகரித்து மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 61 ஆயிரத்து 689 புள்ளிகளில் உச்சம் தொட்டது.

கடந்த 52 வாரங்களில் அதிகபட்சமாக ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் முதல் முறையாக கடந்து சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்போசிஸ், எச்.டி.எப்.சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக விலை உயர்ந்தன.

அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 18 ஆயிரத்து 300 புள்ளிகளை கடந்து உச்சம் தொட்டது. அமெரிக்க பணவீக்கம் கணிக்கப்பட்டதை விட குறைந்தது உள்ளிட்ட காரணங்களே ஆசிய பங்குச் சந்தை உச்சம் தொட காரணமாக கருதப்படுகிறது.

அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து, 80 ரூபாய் 74 காசுகளில் நிலை பெற்று உள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் 2 சதவீதம் சரிந்தது கூட இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க உதவியதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லண்டன் மாநாட்டில் தமிழ்நாடு சுற்றுல்லா துறை அரங்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.